ADDED : மே 07, 2026 02:36 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், கோரிமேடு அன்பு நகரை சேர்ந்த, நடராஜன் மகள் மோனிஷா, 19. அதே பகுதியில் உள்ள ஜவுளி கடையில் பணிபுரிகிறார். கடந்த, 2ல் பணிக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தாய் சாந்தி, நேற்று
முன்தினம் அளித்த புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் தேடுகின்றனர்.அதேபோல் காரிப்பட்டி, கூட்டாத்துப்பட்டியை சேர்ந்த சின்ராஜ் மகள் கற்பகம், 19. அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை, பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் தங்கமணி அளித்த புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
