/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உரிமமில்லாத நாட்டு துப்பாக்கி விவசாயிக்கு 2 ஆண்டு சிறை ஓசூர், நவ. 20 உரிமமில்லாத நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்த விவசாயிக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த தேவரபெட்டா கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா, 43. விவசாயி. இவருக்கு, கணேஷ், 28, மல்லேஷ் என்ற இரு தம்பிகள் மற்றும் நாகராஜ் என்ற அண்ணன் இருந்தனர். செ

ADDED : நவ 20, 2025 02:55 AM
x
ஓசூர், ந உரிமமில்லாத நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்த விவசாயிக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த தேவரபெட்டா கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா, 43. விவசாயி. இவருக்கு, கணேஷ், 28, மல்லேஷ் என்ற இரு தம்பிகள் மற்றும் நாகராஜ் என்ற அண்ணன் இருந்தனர். சொத்தை பிரித்து கொடுக்குமாறு அடிக்கடி கணேஷ் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த, 2018 மார்ச், 18ம் தேதி இரவு, கணேஷை தாக்கி, உரிமம் இல்லாத துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக, சங்கரப்பாவை தளி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சந்தோஷ், சங்கரப்பா மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், கொலை வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்தார். ஆனால், உரிமமின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் மேலும், 2 மாத சிறை
தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.