/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 பவுன் நகை திருடிய 2 வாலிபர்கள் கைது
/
3 பவுன் நகை திருடிய 2 வாலிபர்கள் கைது
ADDED : ஆக 26, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி,பனமரத்துப்பட்டி அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி முத்து, 53. இவர், கடந்த 20ல், இரவு வீட்டை பூட்டி விட்டு அரளி பூ பறிக்க சென்றார்.
மறுநாள் காலை வீட்டிற்கு வந்தபோது, பீரோவில் இருந்த மூன்று பவுன் நகை, ஒரு வெள்ளி அரைஞான் கயிறு ஆகியவற்றை காணவில்லை. பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்து, வீடு புகுந்து நகை திருடிய அதே ஊரை சேர்ந்த தனுஷ், 24, பிரபு, 26, ஆகியோரை நேற்று கைது செய்து, மூன்று பவுன் நகை, அரைஞான் கயிறை மீட்டனர்.