ADDED : நவ 30, 2026 02:05 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: ஓமலுார் தாலுகா தொளசம்பட்டி ஏரி அருகே வசிக்கும் ஆதிதிராவிட மக்கள், 30க்கும் மேற்பட்டோர், அரசுக்கு சொந்தமான நீர் பிடிப்பு தரிசு நிலத்தில் இலவச வீட்டு மனை கோரி, கடந்த, 24ல் மூங்கில் கம்புகளை ஊன்றி கூரைகளை அமைத்தனர்.
வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சு நடத்திய பின், அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதுகுறித்து தொளசம்பட்டி வி.ஏ.ஓ., கீர்த்தி புகார்படி, தொளசம்பட்டி போலீசார், அடையாளம் தெரிந்த, 20 பேர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது, ஆக்கிரமிப்பு, சட்டவிரோதமாக கூடியது ஆகிய பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிந்தனர்.
