தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 225 மதுபாட்டில் பறிமுதல் முதியவர் தப்பி ஓட்டம்

225 மதுபாட்டில் பறிமுதல் முதியவர் தப்பி ஓட்டம்

225 மதுபாட்டில் பறிமுதல் முதியவர் தப்பி ஓட்டம்


ADDED : நவ 30, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2026 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: காரிப்பட்டி போலீ சார், குள்ளம்பட்டி ஆலமரம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 'ஆக்டிவா' மொபட்டில் வந்தவர், போலீசாரை பார்த்ததும், மொபட்டை அப்படியே போட்டு விட்டு, தப்பி ஓடி விட்டார்.வாகனத்தை சோதனை செய்தபோது அதில், 225 டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில் தப்பி ஓடியவர், சுக்கம்பட்டியை சேர்ந்த குமார், 52, என்பதும், அவர் டாஸ்மாக்கில் மொத்தமாக பாட்டில்களை வாங்கி, வீடு அருகே பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதும் தெரிந்தது. மொபட்டுடன், 225 பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார், குமாரை தேடுகின்றனர்.

பழ வியாபாரி கைது

மேச்சேரி, காமனேரியை சேர்ந்தவர் சவுந்தரராஜ், 35. காமனேரி பஸ் ஸ்டாப் அருகே பழக்கடை நடத்துகிறார். நேற்று காலை அவரது வீட்டில், மேச்சேரி போலீசார் சோதனை செய்தபோது, 33 'குவார்ட்டர்' மதுபாட்டில்கள் இருந்ததால் பறிமுதல் செய்தனர். பின் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us