ADDED : மே 08, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி : சேலம் மாவட்டம் வாழப்பாடி, கிழக்காட்டில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, செல்வராஜ், 35, என்பவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
அந்த வீட்டில் நேற்று மதியம் வாழப்பாடி போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையில், 2.30 லட்சம் ரூபாய் மதிப்பில், 70 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான செல்வராஜை தேடி வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'செல்வராஜ், ஏற்கனவே ஆத்துாரில் புகையிலை பதுக்கி விற்றது தொடர்பாக, அவர் மீது ஆத்துார் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு எங்கும் இதுபோன்று செயல்பட்டுள்ளாரா என விசாரணை நடக்கிறது' என்றனர்.

