/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திறன் மேம்பாடு தேர்வு 2,365 பேர் 'ஆப்சென்ட்'
/
திறன் மேம்பாடு தேர்வு 2,365 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 09, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சீனாவின்
ஷாங்காய் நகரில், 48வது உலக திறனாய்வு போட்டி, 2026ல் நடத்தப்பட
உள்ளது. அதில் பங்கேற்க ஏதுவாக, தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம்
சார்பில், 'நான் முதல்வன்' திட்டத்தில், 63 வகை திறன்களுக்காக, 16
முதல், 24 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டி தமிழகம் முழுதும்
நடந்தது.
சேலம் மாவட்டத்தில், 13 மையங்களில், காலை, 11:00
முதல், 12:00 மணி வரை போட்டி நடத்தப்பட்டது. அதில்
அனுமதிக்கப்பட்ட, 3,873 பேரில், 1,508 பேர் தேர்வு எழுதினர். இது,
38.93 சதவீதம். 2,365 பேர் வரவில்லை. இணை இயக்குனர் ராஜேந்திரன்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தேர்வு மையங்களில் ஆய்வு
செய்தனர்.

