/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெயின்ட் கடைக்காரர் வீட்டில் 25 பவுன் திருட்டு 5 தனிப்படை அமைப்பு
/
பெயின்ட் கடைக்காரர் வீட்டில் 25 பவுன் திருட்டு 5 தனிப்படை அமைப்பு
பெயின்ட் கடைக்காரர் வீட்டில் 25 பவுன் திருட்டு 5 தனிப்படை அமைப்பு
பெயின்ட் கடைக்காரர் வீட்டில் 25 பவுன் திருட்டு 5 தனிப்படை அமைப்பு
ADDED : செப் 22, 2024 04:32 AM
சங்ககிரி: பெயின்ட் கடைக்காரர் வீட்டில், 25 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதனால், 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
சேலம் மாவட்டம் சங்ககிரி மலை அடிவாரம் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையில் வசிப்பவர் ஜெகநாதன், 67. இவர் சங்ககிரி - சேலம் பிரதான சாலையில் பெயின்ட் கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி ராஜாம்பாள், 65. இருவரும் சென்னையில் வசிக்கும் மகன் லோகேஸ்வரனின் குழந்தை பிறந்தநாள் விழாவுக்கு, கடந்த, 19ல் சென்னை புறப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் வீடு நேற்று முன்தினம் திறந்து கிடப்பதை பார்த்து, அருகில் உள்ள வீட்டினர், ஜெகநாதனுக்கு தகவல் கொடுத்தனர்.
நேற்று காலை ஜெகநாதன், ராஜாம்பாள் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த டாலர் சங்கிலி, கல் வைத்த வளையல் இரு ஜோடி, சாதா வளையல் 4 ஜோடி, இரு பிரேஸ்லட் உள்பட, 25 பவுன் நகைகள், பட்டுப்புடவைகள் திருடுபோனது தெரிந்தது.
மேலும் மாடியில் இருந்த, 'கபோர்டு' உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சங்ககிரி போலீசில் ஜெகநாதன் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், சம்பவ இடத்தை பார்வையிட்டார். அவருடன், சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர். இதுதொடர்பாக, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, வீட்டை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.