ADDED : மார் 20, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் : சேலம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த ஜலம்சிங்ரத்துார் என்பவர், பொம்மிடியில் ஹார்டுவேர் கடை நடத்துகிறார். நேற்று அவர், ஆட்டையாம்பட்டிக்கு 'பொலிரோ' ஜீப்பில் புறப்பட்டார்.
ஆனால் டேனிஷ்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஓமலுார் தேர்தல் பறக்கும் படை குழு அதிகாரி வாசுதேவபிரபு தலைமையில் போலீசார் நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில் முறையான ஆவணமின்றி, 2.53 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஓமலுார் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

