/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பல இடங்களில் கைவரிசை காட்டியதிருடனிடம் 27 பவுன் நகைகள் மீட்பு
/
பல இடங்களில் கைவரிசை காட்டியதிருடனிடம் 27 பவுன் நகைகள் மீட்பு
பல இடங்களில் கைவரிசை காட்டியதிருடனிடம் 27 பவுன் நகைகள் மீட்பு
பல இடங்களில் கைவரிசை காட்டியதிருடனிடம் 27 பவுன் நகைகள் மீட்பு
ADDED : மார் 20, 2025 01:16 AM
பல இடங்களில் கைவரிசை காட்டியதிருடனிடம் 27 பவுன் நகைகள் மீட்பு
இடைப்பாடி:பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய திருடனை பிடித்த போலீசார், 27 பவுன் நகைகளை மீட்டனர்.
இடைப்பாடி போலீசார், நேற்று வீரப்பம்பாளையம் புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வந்த தங்கமணி, 28, என்பவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து ஸ்டேஷன் அழைத்துச்சென்று விசாரித்தபோது, பல இடங்களில் நகைகளை திருடியவர் என தெரிந்தது. அவர் வாக்குமூலப்படி, 27.7 பவுன் நகைகளை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:இடைப்பாடியை சேர்ந்த குணசேகரன் வீட்டில் கடந்த, 11ல், 4.5 பவுன் நகை திருடுபோனது. கடந்த ஆண்டு ஆக., 5ல், இடைப்பாடி, அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கீதா வீட்டில், 15.5 பவுன் திருடுபோனது.
அதேபோல் இடைப்பாடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த குழந்தைசாமி வீட்டில் ஒரு பவுன் தங்க நகை, மகுடஞ்சாவடி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த தேன்மொழி வீட்டில், 6.7 பவுன் திருடுபோனது. இந்த நகைகளை திருடிய தங்கமணி கைது செய்யப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டன.
அவர் மீது சென்னை, திருவள்ளூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது, விசாரணையில் தெரியவந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.