ADDED : ஆக 24, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகி-றது. அங்கு, 3,523 பேர் பயிற்சி பெற்ற நிலையில், 563 பேர், பல்-வேறு அரசுத்துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் வரும், 28 காலை, 10:00 மணி முதல், 'குரூப் - 2, 2ஏ' முதல்நிலை தேர்வுக்கு பதிவு செய்துள்ளவர்களுக்கு, பயிற்சி வகுப்பு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்க உள்ளது. அனுபவமிக்க பயிற்சியாளர்களால் வகுப்பு நடத்தி, அடிக்கடி மாதிரி தேர்வுகள் வைத்து, உடனுக்குடன் மதிப்பெண்கள் வழங்-கப்படும். போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களும், அங்குள்ள நுாலகத்தில் உள்ளன. விபரங்களுக்கு, 0427 - 2401750 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
