/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் 2ம் ஆண்டு நிறைவு விழா
/
ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் 2ம் ஆண்டு நிறைவு விழா
ADDED : செப் 18, 2025 02:24 AM
மேச்சேரி, மேச்சேரி, கைகாட்டி வெள்ளார், வசந்த நகரில் உள்ள, ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், 2ம் ஆண்டு நிறைவு விழா, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமத்துடன் தொடங்கியது. அங்குள்ள வசந்த விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள், பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலை அடைந்தனர். அங்கு ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம், மகாபிஷேகம் கலச அபிஷேகங்கள் நடந்தது.
ராம பக்த ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளை சார்பில், மேச்சேரி ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி களில், 2024 -- 25 கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், இதர சேவை புரிந்த மாணவர்கள் என, 80 பேருக்கு நினைவு கேடயம், ஒவ்வொருவருக்கும் தலா, 5,000 வீதம் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மதுரை ருத்ரா நாட்டிய கலைக்குழுவின் தாரமங்கலம் டாக்டர் காஞ்சனா தேவி மாணவியரின் பரதநாட்டியம் நடந்தது. இந்த மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஆஞ்ச நேயர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், 108 கலச அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைந்தது.
அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ராம பக்த ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளை நிறுவனரான, உரக்கடை ஆறுமுகம், வசந்தா, எம்.கே.கன்ஸ்ட்ரக்சன் தலைவர் முருகேசன், செயலர் நாகநந்தினி, கனிஷ்க் லக் ஷிதா, விழா குழுவினர் செய்திருந்தனர். மேலும் புரட்டாசி முழுதும் சிறப்பு பூஜை நடக்கிறது. வரும், 21ல், மகாளய அமாவாசையில், சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.