/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உதவித்தொகை தேர்வு சேலம் மாவட்டம் 2ம் இடம்
/
உதவித்தொகை தேர்வு சேலம் மாவட்டம் 2ம் இடம்
ADDED : ஏப் 13, 2025 04:54 AM
சேலம்: என்.எம்.எம்.எஸ்., எனும், மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் தேர்வு நடக்கிறது. இதில், தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு, 9 முதல் பிளஸ் 2 வரை, மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை
வழங்கப்படும்.
நடப்பு கல்வியாண்டு தேர்வு, பிப்., 22ல் நடந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. 6,695 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்-டத்தில், 508 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அடுத்து சேலம் மாவட்டத்தில், 479 பேர் தேர்ச்சி பெற்று, 2ம் இடம் பிடித்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், நேற்று வாழ்த்து தெரி-வித்தார்.

