தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3 கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

3 கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

3 கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 07, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:தமிழ்நாடு அரசு நர்சு சங்கம் சார்பில், சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை, 7:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார்.

அதில் அரசு மருத்துவமனைகளில் புது பணியிடங்களை தோற்றுவிக்காமல் ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களை நிரவல் செய்த ஆணையை ரத்து செய்தல்; செவிலியர் பெயரை செவிலிய அலுவலர் என மாற்றுதல்; 10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் செவிலியர்களுக்கு தொகுப்பூதிய முறையை ரத்து செய்து விட்டு காலமுறை ஊதியம் வழங்குதல் ஆகிய, 3 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மாவட்ட செயலர் வளர்மதி, பொருளாளர் விஜயலட்சுமி, மாநில துணைத்தலைவர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us