சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை அருகே சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ், 30. இவரது மனைவி அஞ்சலி, 20. இவர் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்ததை, சதீஷ் கேட்டுள்ளார். இதில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் வேதனை அடைந்த அஞ்சலி, கடந்த, 5ல் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் சதீஷ் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் அஸ்தம்பட்டி மணக்காட்டை சேர்ந்த கார்த்திக்குமார் மனைவி பானு, 29. கடந்த, 1ல் தம்பதி இடையே தகராறால், பானு வீட்டில் இருந்து மாயமானார். கார்த்திக்குமார் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.
ஆட்டையாம்பட்டி, சின்னசீரகாபாடி ஏரிக்காட்டை சேர்ந்தவர் ஷாலினி, 17. இவரை கடந்த, 5 முதல் காணவில்லை என அவரது தாய் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.