/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி மாணவர்களுக்கு 'போதை' விற்ற 3 பேர் கைது
/
பள்ளி மாணவர்களுக்கு 'போதை' விற்ற 3 பேர் கைது
ADDED : டிச 23, 2024 10:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், தாதகாப்பட்டியில் உள்ள பள்ளி அருகே, அன்னதானப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது அம்பாள் ஏரி சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது, போதை பொருட்கள் வைத்திருந்தனர்.
விசாரணையில் நெத்திமேடு கே.பி.கரட்டை சேர்ந்த விஜய், 26, தாதகாப்பட்டி, நாகூர் தெரு செல்வராஜ், 23, சண்முகா நகர் பிரகாஷ், 25, என்பதும், பள்ளி மாணவர்களை குறி வைத்து, போதை பொருட்களை விற்றதும் தெரிந்தது. பின், 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர் களிடம் இருந்து, 39,000 ரூபாய் மதிப்பில், போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

