ADDED : ஆக 24, 2026 01:43 AM
மேட்டூர்: மேட்டூர், காவேரிகிராஸ், பெரியமாரியம்மன் கோவில் வீதி அருகே வசிப்பவர் சுரேஷ்குமார், 38. தனியார் நிறுவன வசூல் முகவர். அவரது சித்தப்பா மகன், நவப்பட்டி, குண்டுகல்லுாரை சேர்ந்த, கிருஷ்ணமூர்த்தி, 37. பந்தல் போடும் தொழிலாளி. ஒரு வாரத்துக்கு முன், சுரேஷ்குமார் தந்தையை, கிருஷ்ணகுமார் தாக்-கியுள்ளார். இதுதொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே முன்-விரோதம் இருந்தது.
கடந்த, 21 மாலை, 4:30 மணிக்கு, மாதையன்குட்டையில் சுரேஷ்குமார், அவரது நண்பர் குணசேகரன், மேட்டூர் அரசு ஐ.டி.ஐ., அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வந்த கிருஷ்ணமூர்த்தி, கத்தியால் சுரேஷ்குமாரின் வயிறு, உள்ளங்கையில் குத்தியுள்ளார். காயம் அடைந்த சுரேஷ்குமார், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார்.
அதேநேரம் சுரேஷ்குமார், குணசேகரன் தாக்கியதால் காயம் அடைந்ததாக கூறி, கிருஷ்ணமூர்த்தியும் மேட்டூர் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், 3 பேர் மீதும் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து, மேட்டூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.
