ADDED : அக் 19, 2026 01:13 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி: தேவூர் அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்த துரைசாமி மனைவி சுகன்யா. தேவூர் அருகே பெரமச்சிபாளையத்தில், ஒரு நிலத்தை விலைக்கு வாங்கினார். இது, அருகே உள்ள விவசாய நில உரிமையாளர் சின்னண்ணனுக்கு பிடிக்கவில்லை. கடந்த, 25ல் சுகன்யா, அவரது தம்பி சூர்யா உள்ளிட்டோர்,
அவர்கள் நிலத்தில் சோளம் விதைத்தனர். அப்போது சின்னண்ணன், அவ-ரது அண்ணன் முருகன் ஆகியோர் கேட்க, வாக்குவாதம் ஏற்பட்டது.
தகராறு முற்றி, சுகன்யா, சூர்யா, அத்தை செல்லம்மாள் ஆகி-யோரை, சகோதரர்கள் தாக்கினர். மூவரும் படுகாயம் அடைந்து இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புகார்படி, தேவூர் போலீசார் விசாரித்து, சின்னண்ணன், முருகனை நேற்று கைது செய்தனர்.
