ADDED : ஆக 25, 2025 03:51 AM
சேலம்: போத்தனுார் - இருகூர் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே பரா-மரிப்பு பணி நடப்பதால், எர்ணாகுளம் சந்திப்பில், காலை, 7:15க்கு புறப்படும் டாடா நகர் எக்ஸ்பிரஸ், வரும், 28, செப்., 2 ஆகிய நாட்களில், போத்தனுார், கோவை, இருகூர் வழியே இயக்-கப்படும்.
அதே நாட்களில் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், கோவை சந்திப்பை தவிர்த்து, போத்தனுார் - இருகூர் வழியே இயக்கப்-படும். இந்த ரயில் போத்தனுார் சந்திப்பில் மதியம், 12:17 மணிக்கு நின்று செல்லும். அதேபோல் காலை, 9:10க்கு இயக்கப்-படும் எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டியும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் போத்தனுார் சந்திப்பில், மதியம், 12:47க்கு நின்று செல்லும்.
செங்கோட்டை எக்ஸ்பிரஸ்
சமயநல்லுார் - மதுரை ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படுவதால், ஈரோடு சந்திப்பில் மதியம், 2:00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ், வரும், 27 முதல், 30 வரை, திண்டுக்கல் சந்திப்பு வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்க ரயில், செங்கோட்டையில் அதிகாலை, 5:10க்கு புறப்படும் ஈரோடு எக்ஸ்பிரஸ், வரும், 28 முதல், 31 வரை, திண்டுக்கல் சந்திப்பில் புறப்பட்டு, ஈரோட்டை அடையும்.