/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 ஆண்டில் 3 கமிஷனர்கள் மாற்றம் மாநகராட்சி நிர்வாகத்தில் தடுமாற்றம்
/
2 ஆண்டில் 3 கமிஷனர்கள் மாற்றம் மாநகராட்சி நிர்வாகத்தில் தடுமாற்றம்
2 ஆண்டில் 3 கமிஷனர்கள் மாற்றம் மாநகராட்சி நிர்வாகத்தில் தடுமாற்றம்
2 ஆண்டில் 3 கமிஷனர்கள் மாற்றம் மாநகராட்சி நிர்வாகத்தில் தடுமாற்றம்
ADDED : பிப் 11, 2025 07:36 AM
சேலம்: சேலம் மாநகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளில், மூன்று கமிஷனர்கள் மாற்றப்பட்டிருப்பது, அலுவலர்கள் மற்றும் பணியா-ளர்களிடையே அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் கமிஷனராக இருந்த கிறிஸ்துராஜ், 2023 மே மாதத்தில், திருப்பூர் கலெக்டராக
பதவி உயர்வு பெற்றார். ஜூன் 8ல், பாலச்சந்தர் கமிஷனராக பதவியேற்று, ஓராண்டு மட்-டுமே பணியில்
இருந்த நிலையில், 2024 ஜூலையில் சென்-னைக்கு மாறுதல் செய்யப்பட்டார்.கடந்த ஜூலை 25ல், புதிய கமிஷனராக ரஞ்ஜீத்சிங் பதவி-யேற்றார். ஆறு மாதங்களே ஆன நிலையில்,
தற்போது ரஞ்-ஜீத்சிங் தேனி மாவட்ட கலெக்டராக பணிமாறுதல் வழங்கப்பட்-டுள்ளது. இரு
ஆண்டுகளுக்குள் மூன்று கமிஷனர்கள் மாற்றப்பட்டதால், நிர்வாக பணிகளில் தொடர்ந்து தடுமாற்றம்
ஏற்பட்டு வருவதாக, பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அதி-ருப்தி தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாக தலைமை பொறுப்பு வகிக்கும், கமிஷனர்
பதவியில் அடிக்கடி ஆட்களை மாற்றுவது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். புதி-தாக வரும்
கமிஷனர், சேலம் மாநகராட்சி மற்றும் அதன் நிர்-வாகம் ஆகியவற்றை தெரிந்து, புரிந்து நடவடிக்கை
எடுப்பதற்கே மூன்று மாதங்களுக்கு மேலாகிவிடும். அதில்லாமல் ஒவ்வொரு கமிஷனர்
பணிபுரியும் விதம் வெவ்வேறானது. அவர்கள் முக்கி-யத்துவம் தரும் பணிகளும் மாறும்.தற்போதுள்ள கமிஷனர் ஆறே மாதத்தில் மாற்றப்பட்ட நிலையில், அவர் எடுத்த முயற்சிகள்,
முடிவடையும் முன்பே கைவிடும் நிலை உருவாகும். இதனால், சீரான நிர்வாகத்தை தர முடியாமல்,
தடுமாற்றத்துக்குள்ளாகிறது. அடுத்து வரும் கமிஷன-ராவது குறைந்தபட்சம், இரு
ஆண்டுகளாவது பணிபுரிய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.