/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாமூல் கேட்டு டிரைவருடன் தகராறு 3 போலீஸ் ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
/
மாமூல் கேட்டு டிரைவருடன் தகராறு 3 போலீஸ் ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
மாமூல் கேட்டு டிரைவருடன் தகராறு 3 போலீஸ் ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
மாமூல் கேட்டு டிரைவருடன் தகராறு 3 போலீஸ் ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
ADDED : டிச 30, 2024 03:34 AM
சேலம்: சேலம் மாவட்டம் கொளத்துார் அருகே, தமிழகம் -- கர்நாடக எல்-லையில் மாவட்ட போலீசாரின் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு மேட்டூர் மதுவிலக்கு பிரிவு போலீசார், வாகன சோதனை மேற்கொள்கின்றனர்.
கடந்த, 27ல் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா பஸ் வந்தது. ஏட்டுகள் செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்-வரன் பஸ்சை சோதனையிட்டனர்.
டிரைவரிடம் லைசென்ஸ், பர்மிட் கேட்டதுடன், மாமூல் கேட்ட-தாகவும் புகார் எழுந்தது. மூவரும் சீருடை அணியாத நிலையில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி-யது. இதில் பஸ் டிரைவர் சிவநாராயணன், 52, கிளீனர் அஜய், 20, ஆகியோரை, கொளத்தூர் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஏட்டுகள் செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்-வரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் மூன்று பேரையும், 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவிட்டார். மூவர் மீதும் துறை ரீதியான விசாரணையும் தொடங்கியுள்ளது.