ADDED : மார் 03, 2024 07:53 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்: தலைவாசல் போலீசார், நத்தக்கரையில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்குவாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த, 3 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, புத்துார் ஏரியில் இருந்து கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது.
இதனால், 3 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், மண் கடத்தலில் ஈடுபட்ட டிரைவர்களான கோவிந்தம்பாளையம் சதாசிவம், 30, பட்டுத்துறை செல்வராஜ், 32, பெரியசாமி, 35, ராமசேஷபுரம் நரேஷ், 26, வேப்பம்பூண்டி மணிகண்டன், 35, மீது வழக்குப்பதிந்தனர். இதில் நரேஷ், மணிகண்டன், பெரியசாமியை கைது செய்தனர்.
