/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குட்டையில் மூழ்கி 3 பேர் பலி நிவாரண நிதி வழங்கல்
/
குட்டையில் மூழ்கி 3 பேர் பலி நிவாரண நிதி வழங்கல்
ADDED : அக் 24, 2024 01:32 AM
குட்டையில் மூழ்கி 3 பேர் பலி
நிவாரண நிதி வழங்கல்
நங்கவள்ளி, அக். 24-
நங்கவள்ளி அருகே வீரக்கல் புது காலனியை சேர்ந்த சிவலிங்கத்தின் மகள் நந்தினி, 20, மகன் சிவகிரி, 10, முனுசாமி மகள் திவ்யதர்ஷினி, 14. இவர்கள் கொத்திக்குட்டை ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் அவர்களது குடும்பத்தினருக்கு தலா, 2 லட்சம் ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தொடர்ந்து நேற்று மதியம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நிவாரண நிதியை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி, மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி
உடனிருந்தனர்.

