/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
30ம் முறை முகாம்: 202 பேர் ரத்ததானம்
/
30ம் முறை முகாம்: 202 பேர் ரத்ததானம்
ADDED : ஆக 16, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: சங்ககிரி யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப், வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார மையம், சேலம் அரசு மருத்துவமனை இணைந்து, 30வது ரத்த தான முகாமை, சங்ககிரி வி.என்.பாளையத்தில் நேற்று நடத்தின.
மருத்துவர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார். சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் ரவீந்திரன் தலைமையில் குழுவினர் ரத்தம் பெறும் பணியில் ஈடுபட்டனர். கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள், தண்ணீர் தண்ணீர் அமைப்பினர், ரோட்டரி கிளப், இன்னர்வீல் சங்கம், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பொது நல அமைப்பினர் என, 202 பேர் ரத்ததானம் செய்தனர். தி.மு.க., பேரூர் செயலர் முருகன், பா.ம.க., நகர செயலர் அய்யப்பன், பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

