/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் ராகவேந்திரரின் 354வது ஆராதனை விழா
/
சேலத்தில் ராகவேந்திரரின் 354வது ஆராதனை விழா
ADDED : ஆக 12, 2025 01:33 AM
சேலம் சேலத்தில், ராகவேந்திரர் ஆராதனை விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சேலம், முதல் அக்ரஹாரத்தில் உள்ள வியாசராஜ மடம் ராகவேந்திரர் கோவிலில், நேற்று முன்தினம் உலக நன்மை வேண்டி தன்வந்திரி யாகம், பவமான யாகம், புருச சுக்த யாகம் மற்றும் ராகவேந்திரர் அஷ்டாட்சர யாகம் ஆகியவற்றுடன் அவரது, 354வது ஆராதனை விழா துவங்கியது.
முதல் நாள் ராகவேந்திரருக்கு சந்தனகாப்பு சார்த்தி பாதுகா பூஜை, கனகாபி ேஷகத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அன்று மேட்டூர் சஞ்சீவி, கோபிநாத் குழுவினரின் பக்தி கச்சேரி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு ராகவேந்திரருக்கு, 108 லிட்டர் பால் மற்றும் பலவிதமான மங்கள பொருட்களால் அபிேஷகம் செய்து, தங்க கவசம் அணிவித்து பாதுகாபி ேஷகம், கனகாபி ேஷகத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கரராமன் குழுவினரின், கர்நாடாக இன்னிசை கச்சேரி நடத்தப்பட்டது. நிறைவு நாளான இன்று (ஆக.,12) சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடக்கிறது. சேலம் பூர்ணப்ரக்ஞா மண்டலியினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடக்கவுள்ளது.