ADDED : ஆக 05, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம், ஆத்துார் அடுத்த ஈச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வேன், பள்ளி மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு, ஏ.குமாரபாளையம் நோக்கி நேற்று மாலை, 5:45 மணிக்கு சென்றது. வேனை டிரைவர் சதீஷ் ஓட்டினார்.
அப்போது, ஏத்தாப்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, கருமந்துறை பகுதியில் இருந்து கிழங்கு லோடு ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி, நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் பயணித்த பள்ளி குழந்தைகள் மூன்று பேர் மற்றும் டிரைவர் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.