ADDED : ஜூலை 23, 2025 01:32 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி, தலைவாசல் அருகே சாத்தப்பாடியில் உள்ள ஏரியில், கெங்கவல்லி போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது டிராக்டர்களில் மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டிப் பிடித்து
மடக்கினர். விசாரணையில் மண் கடத்தலில் ஈடுபட்டது, சாத்தப்பாடி பழனிமுத்து, 59, கந்தசாமி, 49, பெரியசாமி, 54, சிவக்குமார், 51, என தெரிந்தது. அங்கிருந்த, 4 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்தனர்.
