/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 பேரிடம் விசாரணை நிறைவு மீண்டும் சிறையில் அடைப்பு
/
4 பேரிடம் விசாரணை நிறைவு மீண்டும் சிறையில் அடைப்பு
4 பேரிடம் விசாரணை நிறைவு மீண்டும் சிறையில் அடைப்பு
4 பேரிடம் விசாரணை நிறைவு மீண்டும் சிறையில் அடைப்பு
ADDED : பிப் 08, 2025 06:45 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டையில் அன்னை தெரசா அறக்கட்டளை நடத்தி, மக்களிடம் முதலீடு பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அறக்கட்டளை தலைவர் விஜ-யபானு உள்பட, 4 பேரை கைது செய்த போலீசார், கோவை சிறையில் அடைத்தனர். கடந்த, 5ல் பொருளாதார
குற்றப்பிரிவு போலீசார், 4 பேரையும், 3 நாள் காவலில் எடுத்து, சேலம் அழைத்து வந்தனர். டி.எஸ்.பி.,
வெங்கடேசன் தலைமையில் போலீசார் விசாரித்தனர். மோசடி பணத்தில் வாங்கிய நில ஆவ-ணங்கள்,
அறக்கட்டளை நடத்திய இடத்தில் இருந்த அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல்
செய்தனர். மேலும் அம்மாபேட்டையை சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பிருப்பது
தெரியவந்துள்ளது. தவிர, அந்த நிறுவ-னத்தின், 25 ஏஜன்டுகள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் காவலில் எடுத்த, 4 பேரையும், கோவை டான்பிட் நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மீண்டும்
சிறையில் அடைத்-தனர்.