/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
32 கிலோ சந்தன கட்டை பறிமுதல் விற்க முயன்ற 4 பேருக்கு 'காப்பு'
/
32 கிலோ சந்தன கட்டை பறிமுதல் விற்க முயன்ற 4 பேருக்கு 'காப்பு'
32 கிலோ சந்தன கட்டை பறிமுதல் விற்க முயன்ற 4 பேருக்கு 'காப்பு'
32 கிலோ சந்தன கட்டை பறிமுதல் விற்க முயன்ற 4 பேருக்கு 'காப்பு'
ADDED : நவ 23, 2024 01:28 AM
சேலம், நவ. 23-------
சந்தன கட்டைகளை விற்க முயன்ற, 4 பேரை, வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம், 32 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
சேலம், கொண்டலாம்பட்டி அருகே, புத்துார் அக்ரஹாரத்தில், சந்தன மரக்கட்டைகளை ஒரு கும்பல் விற்க முயன்றது. இதை அறிந்து, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் உத்தரவுப்படி, சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் பெரியபுத்துாரை சேர்ந்த ராமகிருஷ்ணன், 38, கோரிமேடு முருகன், 51, கருமந்துறை அசோகன், 26, செல்வம், 34, என்பதும், விறகு வெட்டுவது போல் சென்று வனப்பகுதியில் உள்ள சந்தன மரக்கட்டைகளை வெட்டி விற்கும் தொழில் செய்து வந்ததும், இதற்கு மூளையாக ராமகிருஷ்ணன் இருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, 4 பேரிடம் இருந்து மொபைல் போன், 1 லட்சம் ரூபாய் மதிப்பில், 32 கிலோ சந்தன கட்டைகள், 'சைன்' பைக், டி.வி.எஸ்., மொபட்டை பறிமுதல் செய்தனர். பின், 4 பேர் மீதும் வழக்குப்பதிந்தனர். நேற்று அவர்களை கைது செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் அசோகன் ஜாமின் பெற்றார். மற்றவர்கள், 15 நாட்கள் சிறையில் அடைக்கப்
பட்டனர்.
மேலும், எவ்வளவு நாட்களாக சந்தன மரக்கட்டைகளை வெட்டி விற்கும் தொழில் செய்தனர், யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது, இவர்களிடம் கட்டைகளை வாங்கியது யார் என, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.