தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 4 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் வாய்ப்பு

4 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் வாய்ப்பு

4 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் வாய்ப்பு


ADDED : மார் 28, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்ட-ணியில், சேலம் மாவட்டத்தில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு தொகுதிகள், பா.ம.க.,வுக்கு ஒதுக்-கப்பட்டன. மீதி, 9 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. அ.தி.மு.க., முதல்கட்ட வேட்-பாளர் பட்டியலில், அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., உள்பட, 23 பேர் பட்டியல் வெளியா-னது. இரண்டாம் கட்ட பட்டியலில், சேலம் மாவட்டத்தில் மீதி உள்ள, 8 தொகுதிகள் என, மொத்தம், 9 தொகுதிகளில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள், 4 பேர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், 2 பேர், புதுமுகங்கள், 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடைப்பாடி, 'சிட்டிங்' எம்.எல்.ஏ., இ.பி.எஸ்., எதிர்க்கட்சி தலைவராகவும், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராகவும் உள்ளார். அவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், 1989ல், ஜெயலலிதா அணியில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1991, 2011, 2016, 2021 என, 5 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். 1998ல், திருச்செங்-கோடு எம்.பி.,யாக இருந்தார். தற்போது இடைப்-பாடி தொகுதியில், 8ம் முறை போட்டியிடுகிறார்.

ஆத்துார் தொகுதியில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ஜெய-சங்கரன், மாநில விவசாய பிரிவு துணை செயல-ராக உள்ளார். இவருக்கு இதே தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கெங்கவல்லி தொகுதி, 'சிட்டிங்' எம்.எல்.ஏ., நல்லதம்பி, தலைவாசல் தெற்கு ஒன்றிய துணை செயலராக உள்ளார். இவருக்கும் இதே தொகுதியில், மீண்டும் வாய்ப்பு வழங்கப்-பட்டுள்ளது. ஓமலுார் தொகுதியில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., மணி, சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலராக உள்ளார். இவருக்கும் அதே தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்-ளது.

2 முன்னாள் எம்.எல்.ஏ.,

மேட்டூர் தொகுதி, 2021ல், பா.ம.க.,வுக்கு வழங்கப்-பட்டது. தற்போது இத்தொகுதியை, அ.தி.மு.க., எடுத்துக்கொண்டது. இங்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், கொள்கை பரப்பு துணை செயலர் வெங்கடாஜலத்துக்கு போட்டியிட வாய்ப்பு வழங்-கப்பட்டுள்ளது. 9 ஆண்டாக, சேலம் மாநகர் மாவட்ட செயலராக இருந்த இவரை, 2025ல் அப்-பொறுப்பில் இருந்து, இ.பி.எஸ்., நீக்கினார். இருப்பினும், எம்.எல்.ஏ.,வாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சங்க-கரி தொகுதியில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., சுந்தரராஜ-னுக்கு பதில், முன்னாள் எம்.எல்.ஏ.,

வெற்றிவேலுக்கு வாய்ப்பு வழங்கப்

பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us