ADDED : ஏப் 12, 2025 01:19 AM
அ நிறம் | அளவு
400 கிலோ புகையிலை காரில் கடத்தியவர் கைது
சேலம், சேலம், சூரமங்கலம் போலீசார், மாமாங்கத்தில் நேற்று வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த, 'கிரேஸ்' காரை நிறுத்தி சோதனை செய்தபோது, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. காரை சூரமங்கலம் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்ததில், டிரைவர், பெங்களூரு, தாஸ்ரஹள்ளியை சேர்ந்த அமிர் ப்ரீத்சிங், 32, என தெரிந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்ததில், பெங்களூருவில் இருந்து கரூருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது தெரிந்தது. 400 கிலோ புகையிலையை பறிமுதல் செய்த போலீசார், இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார் உரிமையாளர் உள்பட, 2 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
