sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 407 பேர் கைது

/

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 407 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 407 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 407 பேர் கைது


ADDED : பிப் 04, 2026 12:08 PM

Google News

ADDED : பிப் 04, 2026 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தம், நேற்று தொடங்கப்பட்டது. சேலத்தில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரோஜா தலைமையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் திரண்டு, கோட்டை மைதானத்தில் காலை, 11:30 மணிக்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, 12:05 மணிக்கு, கோரிக்கையை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியல் செய்த, 400 பெண்கள் உள்பட, 407 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக, ஒருங்கிணைப்பாளர் சரோஜா கூறுகையில், ''தி.மு.க., தேர்தல் வாக்குறுதியின்படி, எங்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி, 6,750 ரூபாய் ஓய்வூதியம் தேவை. பணி ஓய்வின்போது, சத்துணவு ஊழியருக்கு, 5 லட்ச ரூபாய், சத்துணவு பணியாளருக்கு, 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். எங்களுடைய, 10 அம்ச கோரிக்கைகளில், முதல்கட்டமாக, 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி, தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை எங்களுடைய வேலை நிறுத்தம் தொடரும்.

ஏற்கனவே, நான்கு கட்ட போராட்டத்தின் விளைவாக, 2 கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us