/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
41 ஏரிகளை நிரப்பக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
41 ஏரிகளை நிரப்பக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 24, 2025 01:30 AM
மேட்டூர் :மேட்டூர் தாலுகா அலுவலகம் எதிரே, தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்(நாம்) சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
அதில் மேட்டூர் அணை உபரிநீரால், சேலம் மாவட்டத்தில், 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தில், மீதி, 41 ஏரிகளையும் நிரப்புதல்; சேலம் மாவட்டத்தில் ஏரிகளுக்கு செல்லும் ஓடைகள், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்; சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,080க்கும் மேற்பட்ட ஏரிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள், ஆகாயத்தாமரைகளை அகற்றுதல் உள்பட, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
செயலர் பச்சியண்ணன், தலைவர் பிரபுராஜா, மாநில செயலர் ராஜேந்திரன், பொருளாளர் முத்துசிவன், சேலம் மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.