தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 11 'ரெகுலர்' தாசில்தார் உள்பட 45 பேர் இடமாற்றம்

11 'ரெகுலர்' தாசில்தார் உள்பட 45 பேர் இடமாற்றம்

11 'ரெகுலர்' தாசில்தார் உள்பட 45 பேர் இடமாற்றம்


ADDED : மார் 05, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில், 11 'ரெகுலர்' தாசில்தார் உள்பட, 45 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். அதன்படி மேட்டூர் ரமேஷ், சேலம் பறக்கும்படை தனி தாசில்தாராகவும், சேலம் தெற்கு ஸ்ரீதர், சந்தியூர், தமிழ்நாடு மாநில வாணிப

கிடங்கு மேலாளராகவும் மாற்றப்பட்டனர்.

அதேபோல் சேலம் பார்த்தசாரதி, ஓமலுார்; அங்கு பணியாற்றிய ரவிக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர், சேலம்; சங்க கிரி வாசுகி, சமூக பாதுகாப்பு திட்டம், சேலம்; காடையாம்பட்டி நாகூர் மீரான், இடைப்பாடி; அங்கு பணியாற்றிய வைத்தியலிங்கம், கலெக்டர் அலுவலக பொது மேலாளர், சேலம்; கெங்கவல்லி நாகலட்சுமி, வாழப்பாடி; அங்கு பணியாற்றிய ஜெயந்தி, பெத்தநாயக்கன்பாளையம்; அங்கு பணியாற்றிய ஜெயக்குமார், தலைவாசல்; தலைவாசல் பாலாஜி, சமூக பாதுகாப்பு திட்டம், ஆத்துார் என, 11 ரெகுலர் தாசில்தார் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட தாசில்தார் அந்தஸ்தில், 45 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.மேலும், ஊரக வளர்ச்சி துறையில், 45 பி.டி.ஓ., 86 துணை பி.டி.ஓ., 54 உதவியாளர், 25 பணி மேற்பார்வையாளர் மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர உதவி யாளர் உஷா, தாரமங்கலம் மண்டல துணை பி.டி.ஓ., தினகரன், சேலம் மண்டல துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை, கலெக்டர் பிருந்தாதேவி பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us