/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில சிலம்ப போட்டிக்கு 46 பேர் தேர்வு
/
மாநில சிலம்ப போட்டிக்கு 46 பேர் தேர்வு
ADDED : நவ 14, 2024 07:37 AM
சேலம்: பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் காந்தி மைதானத்தில் மாவட்ட சிலம்ப போட்டி நேற்று நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் லாரன்ஸ் தொடங்கி வைத்தார்.
அரசு, அதன் உதவி பெறுபவை, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 14, 17, 19 வயது அடிப்படையில், ஒற்றை கொம்பு, இரட்டை கொம்பு உள்பட பல்வேறு பிரிவுகளில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் திறமைகளை வெளிப்படுத்தினர்.
முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற, 23 வீரர், 23 வீராங்கனைகள் என, 46 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வரும் ஜனவரியில்,
மயிலாடுதுறையில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

