/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செந்தில் கல்வி குழுமத்தில் 4ம் ஆண்டு விளையாட்டு விழா
/
செந்தில் கல்வி குழுமத்தில் 4ம் ஆண்டு விளையாட்டு விழா
செந்தில் கல்வி குழுமத்தில் 4ம் ஆண்டு விளையாட்டு விழா
செந்தில் கல்வி குழுமத்தில் 4ம் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : ஆக 21, 2024 06:29 AM
சேலம்: செந்தில் கல்வி குழுமத்தில் இயங்கும் சேலம் செந்தில் பப்ளிக்; தர்மபுரி அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக், செந்தில் மெட்ரிக் மேல்நிலை; கிருஷ்ணகிரி செந்தில் பப்ளிக்; செந்தில் மெட்ரிக் ஆகிய, 5 பள்ளிகள் ஒருங்கிணைந்து, அதியமான்கோட்-டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில், 4ம் ஆண்டு விளை-யாட்டு விழாவை கொண்டாடின.செந்தில் கல்வி நிறுவன தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்-தலைவர் மணிமேகலை தலைமை வகித்தனர். செயலர் தனசேகர், தாளாளர் தீப்தி முன்னிலை வகித்தனர்.இதில் சேலம் டி.ஐ.ஜி., உமா, கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில், 5 பள்ளிகளை சேர்ந்த மாணவியர் ஒன்-றிணைந்து அணிவகுப்பு நடத்தினர்.
மேலும் பள்ளிகள் இடையே ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டெறிதல், குண்டெறிதல், ஈட்டியெறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்-பட்டன. இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரி-சுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர்கள் செந்தில்முருகன், மனோகரன், சிவராமகிருஷ்ணன், வெங்கட அழ-கிரி, வேதகுமார், துணை முதல்வர்கள், கல்வி ஒருங்கிணைப்பா-ளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

