ADDED : ஏப் 08, 2025 07:18 AM
சேலம்: சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக, கஞ்சா விற்பனை அதிக-ரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், கமிஷனர் பிரவீன் குமார் அபினபு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
நேற்று முன்தினம் கிச்சிப்பாளையம் தனியார் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த, ஐந்து பேரை பிடித்து விசாரித்த-போது, அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய
வந்தது.
சேலம் குமரகிரிபேட்டையை சேர்ந்த கவுதம் என்ற ராமசந்திரன், 33, கடம்பூர் முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த காசி பிரசாத், 24, இம்தியாஸ், 27, அம்மாபேட்டை மாருதி நகர் மாதேஷ், 25, கிச்சிப்பாளையம் திருநாவுக்கரசர் தெரு செட்டி-யப்பன், 24, ஆகிய ஐந்து பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 2.50 கிலோ கஞ்சாவை கிச்சிப்பாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
