தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் ஆயுதங்களுடன் கைது

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் ஆயுதங்களுடன் கைது

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் ஆயுதங்களுடன் கைது


ADDED : ஜன 11, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர், 4 ரோடு, ஸ்டேட் வங்கி குடியிருப்பு பின்புறம் வசிப்-பவர்கள் மூர்த்தி, 35, வசந்த், 38, பொன்னகர் ஜீவா, 28, சரத், 25, காவேரி பாலம் மீனவர் குடியிருப்பு ராஜா, 40. இவர்கள், 5 பேர் மீது ஏற்கனவே மேட்டூர் போலீசில் கொலை, வழிப்பறி, கஞ்சா வழக்குகள் உள்ளன.

இவர்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு, மேட்டூர், 4 ரோடு, ஜீவா நகர் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் ஒன்றாக சேர்ந்து, வழக்குகளை நடத்தவும், வீட்டு செலவுக்கும், வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கவும், சாலையில் செல்வோரை மிரட்டி பணம், நகை பறிக்கவும் திட்டமிட்டனர். இதை அறிந்து, அங்கு சென்ற போலீசார், 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கத்தி, கம்பி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us