ADDED : மே 28, 2026 03:37 AM
அ நிறம் | அளவு
சேலம்; ஆட்டையாம்பட்டி, டி.வி.எஸ்., தெருவை சேர்ந்-தவர் பிரவீன்குமார், 21. ஆட்டையாம்பட்டியில் உள்ள விநாயகர் கோவில் அருகே, நேற்று முன்-தினம் நின்றிருந்தார்.
அப்போது சின்னதம்பி தெருவை சேர்ந்த சேகர், 21, என்பவர், காரில், பிரவீன்குமார் மீது மோது-வது போல் வந்தார்.
இதுகுறித்து பிரவீன்குமார், சேகரிடம் கேட்க, வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரவீன்-குமார் அணிந்திருந்த, 5 பவுன் சங்கிலியை பறித்-துக்கொண்டு, சேகர் சென்றுவிட்டார். இதுகுறித்து பிரவீன்குமார் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
