ADDED : அக் 03, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
தளவாய்பட்டி திருப்பதி கவுண்டனுார், ஐஸ்வர்யம் அவென்யூவை
சேர்ந்தவர் சுரேஷ், 45. இவர் வீட்டு பீரோவில் இருந்த, 5 பவுன் நகை, 28,000
ரூபாய் திருட்டு போனதாக, நேற்று முன்தினம் இரும்பாலை போலீசில் புகார்
அளித்தார்.
அப்போது, வீட்டில் வேலை செய்யும், சன்னியாசி குண்டு,
பாறைக்காட்டை சேர்ந்த ராஜேஸ்வரி, 49, மீது சந்தேகம் இருப்பதாக
தெரிவித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார்,
ராஜேஸ்வரியிடம் விசாரித்தபோது, அவர் திருடியது தெரிந்தது. இதனால்
அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
