ADDED : நவ 21, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சியை சேர்ந்த, விவசாயி பழனிசாமி. இவர் வீடு அருகே பட்டி அமைத்து, ஆடுகளை வளர்க்கிறார்.
நேற்று முன்தினம் இரவு, அந்த பட்டியில் இருந்த, 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துள்ளது. அதில், 5 ஆடுகள் இறந்துவிட்டன. காயம் அடைந்த ஆடுகளுக்கு, கால்நடை மருத்துவர்கள், நேற்று சிகிச்சை அளித்தனர். இதை அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார், சம்பவ இடத்தில் விசாரித்தனர். இருப்பினும் ஆடு வளர்க்கும் விவசாயிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

