ADDED : ஜூன் 19, 2026 02:26 AM
சேலம்; சேலம் மாவட்டம் காரிப்பட்டி, எஸ்.என்.மங்க-லத்தை சேர்ந்த, சின்னதுரை மகள் கஸ்துாரி, 22. அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், எம்.எஸ்சி., 2ம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 16ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், வீடு திரும்பவில்லை.
அதேபோல் எஸ்.என்.மங்கலத்தை சேர்ந்த, பழ-னிசாமி மகள் சென்னம்மாள், 19. கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., படிக்கிறார். தாத்தா சின்னுசாமி வீட்டில் தங்கியிருந்த அவர், கடந்த, 14ல் மாயமானார். இதுகுறித்து நேற்று முன்தினம் அளித்த புகார்படி, இரு மாணவியரையும், காரிப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.வீராணம், அல்லிக்குட்டையை சேர்ந்த, ஜீவாவின் மகள் திவ்யா, 20. கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., படிக்கிறார். அவரும் நேற்று முன்தினம் மாயமான நிலையில், வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், சேலத்தாம்பட்டியை சேர்ந்த, சீனிவாசன் மகள் சத்யபிரியா, 19. வீட்டில் பியூட்டி பார்லர் நடத்துகிறார். நேற்று முன்தினம் மாயமான நிலையில், சூரமங்கலம் போலீசார் தேடுகின்-றனர்.
வீராபாண்டி, சின்னசீரகாபாடியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் மனைவி உஷாராணி, 30. அதே பகு-தியில் உள்ள தாபாவில் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் மாயமான நிலையில், ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
