/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
50 மாணவ, மாணவியர் இயற்கை முகாம் பயணம்
/
50 மாணவ, மாணவியர் இயற்கை முகாம் பயணம்
ADDED : ஜன 07, 2026 06:35 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 10 அரசு பள்ளிகளில் இருந்து, 28 மாணவர், 22 மாணவியர் என, 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, இரு நாட்கள் இயற்கை முகாம் பயண-மாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, பஸ்சில் நேற்று புறப்பட்டனர். அந்த பஸ்சை, கலெக்டர் பிருந்தாதேவி கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது:
இயற்கை முகாமுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மேட்டூர் அழைத்து செல்லப்பட்டு, அனல் மின் நிலையம், மூலிகை தோட்டம், விதைப்பண்ணை, உணவு கழிவில் இருந்து உரம் தயாரிக்கும் மையம், பொட்டனேரி ஆடு ஆராய்ச்சி மையம், பண்ணவாடி ஏரி பறவைகள் ஆகியவற்றை பார்வையிட செய்து, சுற்றுச்சூழல், காலநிலை பருவ மாற்றம் குறித்த செயல்பாடுகள் பற்றி, கருத்தாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

