/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க., 53வது ஆண்டு விழா கொண்டாட்டம்
/
சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க., 53வது ஆண்டு விழா கொண்டாட்டம்
சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க., 53வது ஆண்டு விழா கொண்டாட்டம்
சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க., 53வது ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : அக் 18, 2024 07:13 AM
சேலம்: அ.தி.மு.க., 53வது ஆண்டு தொடக்க விழா, சேலம் மாநகர அ.தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது.
சேலம் நான்கு ரோடு அருகே அண்ணா பூங்காவில் உள்ள, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைக்கு மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமையில், அமைப்பு செயலர் சிங்காரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியினர், மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* ஓமலுார் பஸ் ஸ்டாண்டில், எம்.எல்.ஏ., மணி தலைமையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. அங்கு அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.,- ஜெயலலிதா படத்துக்கு மலர்கள் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியினர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
* காடையாம்பட்டி வி.ஏ.ஓ.,அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.,சிலை, காருவள்ளி சந்தை வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ.,சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.,கிருஷ்ணன், ஜெ.,பேரவை மாநில துணை செயலர் விக்னேஷ், ஓமலுார் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் அசோகன், கோவிந்தராஜு, நகர செயலர் சரவணன், காடையாம்பட்டி சித்தேஸ்வரன், சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
* பனமரத்துப்பட்டியில், கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் தலைமையில், வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடி ஏற்றி வைத்து பேசினார். மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.பனமரத்துப்பட்டி நகர அ.தி.மு.க.,செயலர் சின்னதம்பி, மல்லுார் நகர அம்மா பேரவை செயலர் பழனிவேலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணக்குமார், மணிவண்ணன், ஒன்றிய துணை செயலர் குணசீலன், இளைஞர் அணி செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.