ADDED : மார் 24, 2026 05:57 AM
சேலம் சேலம் சூரமங்கலம் பகுதியில், நேற்று பெண் துாய்மை பணியாளரிடம், 5.4 பவுன் தங்க செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
சேலம், ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்புரத்தினம் மனைவி விஜயா, 67. இவர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், துாய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 6:30 மணிக்கு பணிக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது ஐந்து ரோடு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பைக்கில் வந்த இருவர் விஜயா கழுத்தில் அணிந்து இருந்த 5.4 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினர். பைக்கில் வந்த ஒருவர் ெஹல்மெட் அணிந்தபடியும், மற்றொருவர் மங்கி குல்லா அணிந்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
இது குறித்து சூரமங்கலம் போலீசில் விஜயா புகார் கொடுத்தார். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
