/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
57 மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை
/
57 மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை
ADDED : பிப் 22, 2024 07:22 AM
ஆத்துார் : 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம், ஆத்துார் தாலுகாவில், கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது துலுக்கனுாரில், தேசிய ஊரக வேலை திட்டத்தில், 27 லட்சம் ரூபாயில் கட்டப்படும் தடுப்பணை; கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் உறைவிட பள்ளி; கல்லாநத்தம், முல்லைவாடி ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், ஆத்துார் தாலுகா, ஒன்றிய அலுவலகங்களில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அப்பமசமுத்திரம் ஊராட்சியில் உள்ள நுாலகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, ஆத்துார் நகராட்சி அண்ணா கலையரங்கில் நடந்த மாற்றுத்திறனாளி சிறப்பு முகாமில், 57 பேருக்கு அடையாள அட்டைகள், உபகரணங்களை, கலெக்டர் வழங்கினார்.
இதில் ஆத்துார் நகராட்சி தலைவி நிர்மலாபபிதா, ஒன்றிய குழு தலைவி பத்மினி பிரியதர்ஷினி, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.