தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 6 மனமகிழ் மன்றத்துக்கு தயாராகிறது 'ஆப்பு'

6 மனமகிழ் மன்றத்துக்கு தயாராகிறது 'ஆப்பு'

6 மனமகிழ் மன்றத்துக்கு தயாராகிறது 'ஆப்பு'


ADDED : மே 16, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம் மாவட்டத்தில், 188 டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்ட நிலையில், புது அரசின் உத்தரவுப்படி வழிபாடு தலம், கல்வி நிலையம், பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த, 14 கடைகள் மூடப்பட்டன. அதேபோல், 'பார்' வசதி-யுடன், 19 இடங்களில் தனியார் மனமகிழ் மன்-றங்கள் செயல்படுகின்றன. அவை, கல்வி நிலையம், வழிபாடு தலம், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளதா என, மாவட்ட நிர்வாகத்தினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி சிவதாபுரம், தாரமங்கலம், ஓமலுார், சேலம், அஸ்தம்பட்டி, சின்னசீரகாபாடி என, 6 இடங்களில் மனமகிழ் மன்றங்கள் செயல்படுவது தெரிந்தது. இதுகுறித்த விபரத்தை, மாவட்ட அதிகாரிகள், அரசுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் விரைவில் அந்த மனமகிழ் மன்றங்கள் மூடப்பட வாய்ப்புள்-ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us