ADDED : டிச 22, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: பொங்கல் பண்டிகை நெருங்குவதால், வெல்லத்தின் தேவை அதி-கமானதை பயன்படுத்தி, தரமற்ற, வெல்லம் தயாரிக்க வாய்ப்புள்-ளது.
இதனால் சேலம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையில் குழுவினர், ஓமலுார் பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட கரும்பு ஆலைகளில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.அதில் காமலாபுரம், ஒட்டத்தெருவில் கிருஷ்ணன் மற்றும் சி.கே.எம்., ஆலைகளில் இருந்து, 6,000 கிலோ வெல்லம் பறி-முதல் செய்யப்பட்டது. அதன் மாதிரி எடுத்து, பகுப்பாய்வு கூடத்-துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தனித்தனியே, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டதாக, கவிக்குமார் தெரி-வித்தார். மேலும் பகுப்பாய்வு முடிவில் தரமற்றது என தெரிந்தால், மேல் நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.

