sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

62,500 ஏக்கரில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள லண்டானா செடியால் வனம் பாழாகும் அபாயம்

/

62,500 ஏக்கரில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள லண்டானா செடியால் வனம் பாழாகும் அபாயம்

62,500 ஏக்கரில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள லண்டானா செடியால் வனம் பாழாகும் அபாயம்

62,500 ஏக்கரில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள லண்டானா செடியால் வனம் பாழாகும் அபாயம்


ADDED : நவ 01, 2024 01:57 AM

Google News

ADDED : நவ 01, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

62,500 ஏக்கரில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள

லண்டானா செடியால் வனம் பாழாகும் அபாயம்

ஓசூர், நவ. 1--

ஓசூர் வனக்கோட்டத்தில், 62,500 ஏக்கர் நிலத்தை லண்டானா செடி ஆக்கிரமித்துள்ளது. அவற்றை கைவினை பொருட்களாக மாற்றும் திட்டத்தை வனத்துறை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது. மாற்று வழியை வனத்துறை யோசிக்கா விட்டால், வனம் பாழாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், 1,50,152 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதில், ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் ஆகிய, 7 வனச்சரகம் மற்றும் 2 சிறப்பு வனச்சரகங்கள் உள்ளன. 150 கி.மீ., துாரம், கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி வருகிறது. ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம், 62,500 ஏக்கர் வனத்தை, லண்டானா என்ற உன்னி முள்செடி ஆக்கிரமித்துள்ளது.

காட்டு தீ பரவ காரணம்

இது மற்ற செடி, கொடிகளை வளர விடாமல் தடுத்து விடுவதால், வனப்பகுதிக்கு பெரும் இடையூறாக உள்ளது. அதிகபட்சம், 2 மீட்டர் உயரம் வரை விரைந்து வளரும் திறனுடைய இந்த செடி, வறட்சி காலங்களில் காட்டு தீ விரைந்து பரவ காரணமாக உள்ளது. இதை அகற்றுவது வனத்துறைக்கு பெரிய சவாலாக உள்ளது.

கைவினை பொருட்கள்

லண்டானா செடிகளை அகற்றி அதை கைவினை பொருட்களாக மாற்றி விற்கும் பணியை கடந்த, 6 மாதங்களுக்கு முன் வரை வனத்துறை மேற்கொண்டது. இதற்காக பழங்குடியின மக்கள், 10 பேரை பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கு மாதந்தோறும், 10,000 ரூபாய் ஊதியத்தை வழங்கியது.

லண்டானா செடியை பழங்குடியின மக்களே அகற்றி, அய்யூர் சூழல் சுற்றுலா மையத்திற்கு எடுத்து வந்து, அவற்றை டிரம்மில் போட்டு, தீ வைத்து வேகவிட்டு, லண்டானா செடியின் கிளைகளை நன்கு வளையும் வகையில் மாற்றி, அறுங்கோண ஸ்டாண்ட், டீபாய், செருப்பு ஸ்டாண்ட், பேப்பர் டிரை, தின்பண்ட ஸ்டாண்ட், வி.ஐ.பி., சேர், டேபிள், பென் ஸ்டாண்ட், லைட் அலங்கார ஸ்டாண்ட், பிளவர் பாட், பார்க் டைப் ரவுண்டர் சேர், கார்டன் சேர், மூன்று பேர் அமரும் சோபா ஆகியவற்றை தயார் செய்தனர்.

அவற்றை வனத்துறை நேரடியாக பொதுமக்களுக்கு விற்றது. 20,000 ரூபாய்க்கு மேல் கைவினை பொருட்களை வாங்குவோருக்கு, சிறப்பு பரிசையும் வழங்கியது. இந்நிலையில், லண்டானா செடியை கைவினை பொருட்களாக மாற்றும் திட்டம் கடந்த, 6 மாதமாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால், வனத்தில் லண்டானா செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து, அதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் வனத்துறை தவிக்கிறது.

நடவடிக்கை தேவை

வனத்துறையினர் கூறுகையில், 'லண்டானா செடிகளை கைவினை பொருட்களாக்கி திறன்பட செய்து வந்தவர் இறந்து விட்டார். அவர் மற்ற பழங்குடியின மக்களுக்கும் கலையை கற்று கொடுத்த நிலையிலும், அப்பணியை செய்ய யாரும் முன்வரவில்லை. மாற்று வேலைக்கு செல்லவே விரும்புகின்றனர். வெளியிலிருந்து ஆட்கள் கிடைக்குமா என தேடியும், இதுவரை கிடைக்கவில்லை. லண்டானா செடிகளால் வனப்பகுதி பாழாகி வருகிறது. வேகமாக வளர்ந்து விடுவதால், அவற்றை அகற்ற முடியாமல் தவிக்கிறோம்.

லண்டானா செடியையும், பிற தாவர கழிவுகளையும் சேகரித்து, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரத்துகள்களாக மாற்றி விற்பனை செய்யலாம். அதற்கு, வனத்துறை உயர் அதிகாரிகள் தான், நடவடிக்கை எடுக்க வேண்டும்'

என்றனர்.






      Dinamalar
      Follow us