/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டப்பகலில் பெண்ணிடம் 7 பவுன் தாலி பறிப்பு
/
பட்டப்பகலில் பெண்ணிடம் 7 பவுன் தாலி பறிப்பு
ADDED : அக் 31, 2025 01:23 AM
வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த வைத்தியகவுண்டன்புதுார், நடு வீதியை சேர்ந்த, கூலித்தொழிலாளி அருள். இவரது மனைவி லாவண்யா, 27. இவர் நேற்று காலை, 10:30 மணிக்கு, அபிநவத்தில் உள்ள கருப்பனார் கோவிலுக்கு, 'டி.வி.எஸ்., எக்ஸல்' மொபட்டில் சென்றார்.
மீண்டும் வைத்தியகவுண்டன்புதுார் செல்ல, மொபட்டை எடுக்க முயன்றபோது, பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள், லாவண்யா அணிந்திருந்த, 7.5 பவுன் தங்க தாலியை பறித்தனர். லாவண்யா தடுக்க முயன்றபோது, அரை பவுன் மட்டும், அவரது கையில் சிக்கியது. மீதி, 7 பவுனை மர்மநபர்கள் பறித்துக்கொண்டு பைக்கில் வேகமாக சென்று தப்பினர். இதுகுறித்து லாவண்யா புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

